31 July 2011

நடிகர் விஜயும் தோழர் டி. ராஜாவும்!

தமிழர்களை இனப்படுகொலை செய்த குற்றவாளி இராஜபக்சே கும்பலை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் தமிழ்நாடெங்கும் 15 லட்சம் பேரிடம் கையயாப்பம் பெற்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மூலம் அய்.நா. அவைக்கு அனுப்பும் கையயாப்ப இயக்கத்தினை கடந்த சூலை 12 அன்று சென்னை, பத்திரிகையாளர் மன்றத்தில் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் தொடங்கிவைத்தார். இனப்படுகொலைக் குற்றவாளிகளுக்கு எதிரான விடுதலைச் சிறுத்தைகள் மூட்டிய இந்தத் தீ தமிழ்நாடெங்கும் மீண்டும் காட்டுத் தீயாய்ப் பரவிக்கொண்டிருக்கிறது.

எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்கள், இயக்கப் பணிகள், இயக்கத் தோழர்களின் இல்ல நிகழ்ச்சிகள், சமச்சீர்க் கல்விக்கான ஆர்ப்பாட்டங்கள், நாடாளுமன்ற நடவடிக்கைகள் என்கிற தமது அன்றாடப் பணிகளுக்கிடையே நேரம் கிடைக்கும்போதெல்லாம் சென்னை இலயோலா கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, உயர்நீதிமன்ற வளாகம், கடைவீதிகள், இரயில் நிலைங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் என எங்கெங்கு சென்றாலும் அங்கெல்லாம் கையயாப்பம் பெற்று இனப்படுகொலைக் குற்றவாளி இராஜபக்சேவுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்பது குறித்து மக்களிடையே விளக்கிப் பேசிவருகிறார். தலைவர் சூறாவளியாய்ச் சுற்றிக்கொண்டிருக்க தொண்டர்களும் அவரவர் வலிமைக்கேற்ப மாவட்டங்களில் கையயாப்ப இயக்கத்தினைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

30 July 2011

சீமான் சொன்னது சரிதானா?


22.06.2011 குமுதம் இதழில்
இரத்தமும் சதையுமாக நம் சொந்தங்கள் தத்தளித்து நின்றபோது, சிங்கள அரசின் சிண்டைப் பிடித்தவர் அவர்(ஜெயலலிதா). எங்களின் இழவு வீட்டிற்கு ஆறுதல் சொல்ல வந்த உறவு. அவரை ஆதரித்ததில் என்ன தவறு?
- சீமான்
***
‘ஈழத்தாய்’ ஜெயலலிதாவால் தமிழீழம் கிடைக்கட்டும்!
வன்னிஅரசு, செய்தித் தொடர்பாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
பயங்கரப் பசியோடு உணவு விடுதிக்குச் சென்ற ஒருவன், முதலில் 5 தோசை ஆணையிட்டு சாப்பிட்டான் பசி தீரவில்லை. மீண்டும் 5 இட்லி சாப்பிட்ட பின்னும் பசி அடங்கவில்லை; பூரி சாப்பிட்டான் பசி தீரவில்லை... கடைசியாக ஒரு வடை சாப்பிட்டான். "அப்பாடா வயிறு நிறைந்துவிட்டது. நான் ஒரு முட்டாள். முதலிலேயே வடையை மட்டும் சாப்பிட்டிருந்தால் வயிறு நிறைந்து பசி போயிருக்குமே!" என்று தனக்குள் புலம்பினானாம். இதுபோல இருக்கிறது அண்ணன் சீமானின் கருத்து.

27 July 2011

ராஜபக்சேவை தண்டிக்க முடியும்! அனைத்துலக சமூகத்தின் ஆதரவை வலுப்படுத்துவோம்! திருமா வேண்டுகோள்!


ராஜபக்சேவை தண்டிக்க முடியும்! அனைத்துலக சமூகத்தின் ஆதரவை வலுப்படுத்துவோம்! திருமா வேண்டுகோள்!


அமெரிக்க நாடாளுமன்ற வெளிவிவகார குழு சிங்கள இனவெறி அரசுக்கு வழங்கி வந்த நிதி உதவினை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதென முடிவெடுத்துள்ள செய்தி வெளியாகியுள்ளது. இனப்படுகொலை குற்றவாளிகள் இராஜபக்சே கும்பலை போர் குற்றவாளிகளாக விசாரிப்பதற்கு அழுத்தம் கொடுக்கிறவகையில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.

மனிதநேய அடிப்படையிலான நிதியுதவியை தொடர்ந்து வழங்குவதென்றும் போர் குற்றங்களை விசாரிப்பதற்கு இராஜபக்சே கும்பல் உடன்பட்டால் பிற நிதியுதவிகளையும் வழங்குவதென்றும் அந்த குழு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இந்த அறிவிப்பின் மூலம் சிங்கள இனவெறி அரசுக்கு எதிரான மனநிலை அனைத்துலக சமூகத்திடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

26 July 2011

திரைப்பட கலைஞர்களிடம் கையொப்பம் பெறும் பணி ....

25 July 2011

சர்வதேச போர்க்குற்றவாளி ராஜபச்சேவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கு விஜய் எதிர்ப்பு



இனப்படுகொலை குற்றவாளி இராஜபக்சேவுக்கு தண்டனை வழங்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் நடத்தும் கையொப்ப இயக்க பணி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக இன்று திரைப்பட கலைஞர்கள் இயக்குனர் மணிவண்ணன், செல்வமணி & ரோஜா , நடிகர் சத்தியராஜ் ஆகியோரிடம்  கையொப்பங்கள் பெறப்பட்டன. ஆர்வமுடன் அனைவரும் கையெழுத்திட்டனர்.

ஆனால் திருவல்லிக்கேணியில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜயிடம் கையெழுத்து வாங்க சென்றபோது அவர் தனக்கு இதில் ஆர்வமில்லை என கூறி கையெழுத்திட மறுத்துவிட்டார்.