13 August 2011

இன்னும் ஏனடா தகுதி - திறமைன்னு பினாத்துறீங்க!

  “பார்ப்பனியத்தின் இனவெறி எந்த வடிவத்திலும் தாக்கும்; எந்த நேரத்திலும் தாக்கும்” என்பார் அய்யா பெரியார். இப்போது ‘ஆரக்ஷன்’ என்னும் இந்தித் திரைப்படத்தின் மூலம் புதிய உத்தியாய் தாக்குதலைத் தொடங்கி இருக்கிறார்கள் வடக்கு ஆரியவாதிகள். அந்தத் தாக்குதலுக்கு, ‘திருப்பி அடி’ என்று கற்றுக்கொடுத்த தலைவர் எழுச்சித்தமிழர்வழிவந்த விடுதலைச்சிறுத்தைகள் எதிர்த்தாக்குதலைக் கொடுத்திருக்கிறார்கள்.


  கடந்த 12.8.2011 காலை தினந்தந்தி நாளிதழில் ‘ஆரக்ஷன்’ திரைப்பட விளம்பரத்தைப் பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்தேன். ‘ஐ யஅ யபiளேவ சுநளநசஎயவiடிn’ என்று திரைப்படத்தின் விளம்பரத்திலேயே தைரியமாகக் கொடுத்து, இன்று முதல் வெளியீடு என்று விளம்பரம் செய்திருந்தார்கள். உடனடியாக தலைவரின் தனிச்செயலாளர் மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன் அவர்களைத் தொடர்புகொண்டு திரைப்படத்தை எப்படியாவது தடுத்து நிறுத்தவேண்டும் என்று ஆலோசனை கேட்டேன். அவரும் தில்லியில் தலைவரைத் தொடர்பு கொண்டு ஒப்புதல் வாங்கிய பின், சத்யம் திரையரங்கை சிறுத்தைகள் முற்றுகையிட நேரம் குறித்தோம்.

  காலை 11 மணிக்கெல்லாம் சிறுத்தைகள் வருவதற்கு முன்னரே காக்கிச்சட்டைகள் குவிந்தன. செய்தியாளர்கள் சிறுத்தைகள் வருகைக்காகக் காத்திருந்தனர். வெளியில் வைக்கப்பட்டிருந்த ‘ஆரக்ஷன்’ திரைப்படத்திற்கான விளம்பர பேனர்களை தியேட்டர் நிர்வாகமே அப்புறப்படுத்தியிருந்தது. தோழர்கள் மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன், சைதை பாலாஜி, விடுதலைச்செல்வன், குமரப்பா, சாரநாத், பகலவன், ஆ.மணி உள்ளிட்ட நூறு சிறுத்தைகளுடன் திரையரங்கின் முன் திரண்டோம். திரைப்படத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

  “தமிழக அரசே தமிழக அரசே இடஒதுக்கீட்டுக்கு எதிரான ‘ஆரக்ஷன்’ திரைப்படத்தைத் தடைசெய்! தடைசெய்”

  “புரட்சியாளர் அம்பேத்கர் தந்தை பெரியார் கொள்கைகளுக்கு எதிரான திரைப்படங்களை அனுமதியோம்! அனுமதியோம்”

போன்ற முழக்கங்கள் திரையரங்கத்தைச் சுற்றி அதிர வைத்தன. வழக்கம் போல்  காவல்துறை எங்களைக் கைது செய்தது.  தலைவரின் தனிச்செயலாளர் தகடூர் தமிழ்செல்வன் அவர்களும் எங்களோடு போராட்டத்தில் இணைந்துகொண்டார். ஒரு நாள் முழுக்க ஒரு திருமண மண்டபத்தில் எங்களை சிறை வைத்தது. மற்ற தோழர்கள் மாவட்டச்செயலாளர் இளஞ்செழியன் தலைமையில் ‘ஐநாக்ஸ்’ திரையரங்கத்தை முற்றுகையிட்டனர். பின்பு மாலை 6 மணிக்கு அனைத்துச் சிறுத்தைகளும் விடுவிக்கப்பட்டனர்.

  காலம் காலமாக உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகத்தின் கோபமாகத்தான் -அநீதிக்கு எதிரான கோபமாகத்தான் - இப்போராட்டத்தை விடுதலைச்சிறுத்தைகள் நடத்தியது. “இடஒதுக்கீடு என்பது சலுகை அல்ல; பிறப்புரிமை”  என்றார் புரட்சியாளர் அம்பேத்கர். அத்தகைய சமூகநீதிப் போராளிகள் போராடிப் பெற்ற இடஒதுக்கீடு உரிமையை ‘சலுகை’ என்று அவமானப்படுத்துவது பார்ப்பனியத்தின் புது உத்தியாக இருக்கிறது. “திறமை இல்லாத தலித் மாணவன் ஒருவன் இடஒதுக்கீடு அடிப்படையில் மேற்படிப்புக்குப் போகமுடிகிறது; தகுதி, திறமை இருந்தும் உயர்சாதி மாணவன் மேற்படிப்புக்குப் போகமுடியவில்லையாம்” ‘ஆரக்ஷன்’ திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி இது.

  1997 சூலை 25ஆம் நாள் இந்திய சனாதிபதி தேர்தலில் கே.ஆர்.நாராயணனை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியுற்ற டி.என்.சேஷன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தலித் என்பதால் கே.ஆர். நாராயணனை ஜனாதிபதியாகத் தேர்வு செய்துவிட்டார்கள்” என்றார்.

  அய்யோ பாவம் கே.ஆர்.நாராயணன் ஆடு, மாடு மேய்த்துவரும் கைநாட்டு போல. எப்படியெல்லாம் தகுதி, திறமையைப் பற்றிப் பேசுகிறார்கள். கே.ஆர்.நாராயணன் எனும் அம்மனிதரின் கல்வித் தகுதியையோ, அறிவாற்றலையோ, டி.என்.சேஷன் எனும் இந்த அதிமேதாவி ‘இடஒதுக்கீடு’ எனும் பெயரால் சிறுமைப்படுத்தியதைப் போலத்தான் தொடர்ந்து தலித்துகளின் அறிவாற்றலை இடஒதுக்கீட்டுக்குள் திணிக்க முயற்சிக்கிறார்கள். அது மட்டுமல்ல எத்தனை ஆண்டுகளுக்குத்தான் இந்த இடஒதுக்கீடு? என்று வேறு கேட்கிறார்கள். சாதி இருக்கிறவரை இடஒதுக்கீடு தொடரத்தானே வேண்டும். இதுதானே சமூக நீதி.

  ஆனால், தலையிலிருந்து பிறந்த கும்பல் இன்னமும் ‘தல’யாகவே துடிப்பது வருணாசிரமத்தை மீண்டும் புதுப்பிக்கச் செய்யும் முயற்சிதான். இந்த முயற்சி எந்த வடிவத்தில் வந்தாலும் சிறுத்தைகள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டோம்.

  ஏனென்றால், நாங்கள் “படைமுறை நடைமுறையே விடுதலை வழிமுறை” என்று தலித்துகளைப் போராளிகளாய் மாற்றிய எழுச்சித்தமிழரின் படையணிகள். ஆகவேதான் உடனடியாகக் களத்தில் இறங்கினோம்.

  அதுசரி, விடுதலைச்சிறுத்தைகள் மட்டும்தான் இடஒதுக்கீடு மீது அக்கறை கொண்டு போராடுமா? மற்ற அமைப்புகள்....?  அதெல்லாம் நமக்குத் தெரியாது.

  ஆனால், சமூக நீதிக்காகப் போராடிய அண்ணா பெயரை வைத்து ஆட்சி நடத்தும் அதிமுக அரசு இத்திரைப்படத்தைத் தடை செய்யாதது ஏன்?

  உத்திரப்பிரதேசம், ஆந்திரா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் அந்தந்த அரசுகள் இத்திரைப்படத்தைத் தடை செய்திருக்கும்போது சமூநீதிப் போராளி அய்யா பெரியார் பிறந்த மண்ணான தமிழ்நாட்டில் தடைசெய்ய மறுப்பது ஏன்?

  இந்து ராம், துக்ளக் சோ போன்றவர்கள் கோபித்துக்கொள்வார்கள் என்பதால்தான் ‘அம்மா’ கண்டுகொள்ளவில்லையோ!

அட இன்னும் ஏனடா தகுதி - திறமைன்னு பினாத்துறீங்க!

- வன்னி அரசு

1 comments:

anthony said...

இடஒதுக்கீட்டிற்கு எதிராக எழும்பும் ஒப்பாரிகள்

பல நூற்றாண்டுகளாக சாதியின் பெயரால் கல்வியும் , சமூக உரிமைகளும் மறுக்கப்பட்ட மக்களுக்கு அவர் தாம் முன்னோர்களுக்கு மறுக்கப்பட்ட உரிமையை மீட்டெடுக்கும் பொருட்டு அவர்களையும் எல்லாரையும் போல் கல்வி பொருளாதார நிலைமைகளில் முன்னேற வழி செய்வதற்காக உருவாக்கப்பட்ட இடஒதுக்கீடு சமூக அநீதி என்று ஊளையிடும் பார்ப்பனிய ஓநாய்கள்..... சாதியின் பெயரால் தெருவில் நடமாடுவதில் தொடங்கி கோவிலில் நுழைவது வரை பல விதமான இட ஒதுக்கீட்டை அமுல்படுத்தி ஒடுக்கப்பட்ட மக்களை மேலும் அடக்கி ஒடுக்கி வைத்திருகின்றனரே..... அதற்கு எதிராக ஏன் இவர்கள் தங்களுடைய வாயை திறப்பதில்லை.... இட ஒதுக்கீட்டால் திறமையான மற்றொருவரின் வாய்ப்பு பறிபோகிறது என்று ஊளையிடும் ஓநாய்கள், தங்களுடைய கடின உழைப்பால் அதிக மதிப்பெண்களுடன் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், போன்ற இந்திய அரசாங்க கல்வி நிறுவனங்களுக்குள் பொதுப்பிரிவில் தேர்வுபெற்ற ஒடுக்கப்பட்ட மாணவர்கள் சாதியின் பெயரால் மாணவர்கள் என்ற போர்வையில் கூட பயிலும் சாதி வெறியர்களால் அவமானபடுத்தப்படுவது அந்த மாணவனின் கடின உழைப்பை கொச்சை படுத்துவது ஆகாதா.....

மேலும் படிக்க

http://meenavarthuyaram.blogspot.com/2011/08/blog-post_14.html

Post a Comment